இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வெங்கட்டாங்குடி கிராமத்தில் பிற்காலப் பாண்டியர்கள் கால சிவலிங்கம் வெட்ட வெளியில் இருந்தது.
03.02.2024 அன்று கோவை அரன் பணி அறக்கட்டளையினர் இராமநாதபுர மாவட்ட உலக சிவனடியார் திருக்கூட்ட அடியார்களுடன் இணைந்து 1½ அடி அளவுடைய நந்தி மற்றும் பலிபீடம் வரவழைக்கப்பட்டு, பீடம் அமைத்து திருமேனிகள் பிரதிட்டைசெய்யப் பெற்றது.
திருமுறைகளில் கயிறு சாற்றி திருநீலாயதாட்சி உடனுறை ஆதிபுராணர் எனும் திருநாமம் இட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பெற்றது.
20X11 அளவில் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் மேற்கூரை அமைத்துத் தரப்பட்டது.
0 Comments