ஆகாயலிங்கேஸ்வர்
திருவள்ளூர் மாவட்டத்தில்,108 சிவாலயங்கள் கொண்ட அதிசய கிராமமாக திகழ்கிறது, உள்ள கொப்பூர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ளது, கொப்பூர் கிராமம். 250 ஆண்டுகளுக்கு முன், திருக்காப்பூர் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமம், நாளடைவில் கொப்பூர் என, அழைக்கப்பட்டு வருகிறது.இந்த கிராமம் அருகே உள்ள, ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜ சுவாமிகள் அவதரிப்பதற்கு முன், இந்த பகுதியில் சைவ சமயத்தைச் சேர்ந்தோர் தான் அதிகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இப்பகுதியில், 108 சிவலிங்கம், நந்திகளுடன் கூடிய சிவாலயங்கள் உள்ளன. 108 சிவாலயங்களும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. வேறு எந்தப் பகுதியிலும், இந்த சிறப்பு இல்லை.ஒவ்வொரு கோவிலுக்கும் முன், ஒரு குளம் உண்டு. இந்த குளத்து நீரை கொண்டு, தினமும் சிவாலயங்களில் உள்ள சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் அபிஷேகமும் பூஜையும் நடத்தப்பட்டது.
செல்லும் வழி
கோயம்பேடு - திருவள்ளூர் செல்லும் அனைத்து மாநகர பஸ்கள், பூந்தமல்லி - திருவள்ளூர் செல்லும் மாநகர பஸ்கள்.
பஸ் நிறுத்தம் அரண்வாயல்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் கொப்பூர் செல்ல வேண்டும்.
தொடர்புக்கு - தீனதயாளன் - 9787191692
0 Comments