Subscribe Us

header ads

சிவபுரம் கிராமத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சிறப்பான சிவன்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெருமந்தூர் வட்டம், சென்னை to அரக்கோணம் சாலையில், பேரம்பாக்கத்திலிருந்து 3 சி.மீ. தொலைவில், மிகவும் பழமையான சிறப்புக்களுடன் கூடிய சிவபுரம் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் பழமையான மிகப்பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கும் அருள்மிகு. குருந்த விநாயகர் ஆலயமும், அதனருகே அருட் பெருஞ்ஜோதி கண்ட, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்... என வாழ்ந்த வள்ளலார், அருட்திரு. இராமலிங்க அடிகளார் ஆலயமும் ஒருங்கே அமைந்துள்ளன.

ஊரின் உள்ளே, சிறப்புமிக்க பார் போற்றும், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் பெரிய கோவிலைக் கட்டிய, அதே ஆண்டில் (கி.பி. 985 முதல் 1014 ம் ஆண்டுகளில்மாமன்னர். இராஜ இராஜ சோழன் அவர்களால்சிவபுரம் கிராமத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த, சிறப்பான சிவன்கோயில் அமைந்துள்ளது. இராஜ இராஜ சோழன் மகாலிங்கமே விரும்புவார் என்றும், அவர் பெயரின் நினைவாக இங்குள்ள இறைவன் - இறைவிக்கு, அருள்மிகு. இராஜ இராஜேஸ்வரி உடனுறை இராஜ இராஜேஸ்வரர் என பெயரோடு, சிறப்பான மூர்த்தி உள்ள சிவலிங்கத்தை அமைத்து உள்ளார். இக்கோயிலின் சுருங்கல் சுற்றுச்சுவர்களில் 22 கல்வெட்டுக்களில், 18 இடங்களில் மாமன்னர். ஸ்ரீ இராஜ இராஜ சோழன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

இந்த கோயிலுக்கு, தேவாரப் பாடல்பெற்ற கூவம் என்னும் திருத்தல ஏரியிலிருந்து, கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்தார் என்றும், சிவபுரம் மற்றும் ஒரகட மகாதேவிமங்கலம், புரிசை கிராமங்களிலிருந்து, ஆடுகள் வளர்க்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் நெய்யைக் கொண்டு வந்து, கோயிலில் அணையா விளக்கு ஏற்றப்பட்டது என்றும் மற்றும் இக் கோயிலின் சிறப்புக்கள் குறித்தும் 22 கல்வெட்டுக் களில் கூறப்பட்டுள்ளது. தொண்மைமிக்க இக்கோயில், பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என, இன்றளவும் தொல்லியல்துறை மூலமாக முறையாக பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இக்கோயில் இராஜ இராஜ சோழன் காலத்திலும்அவர்மகன் இராஜேந்திரன் சோழன் காலத்திலும் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. மன்னர் இராஜ இராஜ சோழன் பிறந்த நாள், ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில், தமிழக அரசும், இங்கே சிவபுரம் கிராமத்திலும் 5 அடி உயரத்தில் அவருடைய திருவுருவப் படம் கோயிலில் உள்ளே நுழைவுவாயில் நேரே வைக்கப்பட்டு, விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் சித்திரை மாதம் 14 ம் தேதியிலிருந்து 19 ம் தேதிவரை தினமும் காலையில் 6: 10 மணியிலிருந்து 6:15 மணிவரை சூரியக் கதிர்கள்.... சிவலிங்கத்தின்மீது பொன்னிறக் கதிர்களாய் மின்னும் வண்ணம், சுடரொளி வீசி, சூரியன் இறைவனை ஆரத்தழுவும் அற்புதக் காட்சியைக் காணும் பக்தர்கள், மெய்சிலிர்த்து சிவ சிவா.... ஓம் நமசிவாய.... என பரவப்பட்டு வணங்குதல் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் திருவாளர். ஸ்ரீதர் மற்றும் திருவாளர். கார்த்திகேயன் அவர்கள் கண்காணிப்பிலும், துணை ஆணையர். திருமதி. சீ. வசந்தி அம்மையார் அவர்களும், இக்கோயிலின் வளர்ச்சியிலும், பராமரிப்பிலும், இக்கோயிலின் சிறப்பை பத்திரிக்கைகள் வாயிலாகவும். அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தியும், ஆசிரியர். திருவாளர். . சகிலாபானு அவர்களால் 2015 -ம் ஆண்டில் "சிவபுரம் " என்னும் தலைப்பில் ஒரு புத்தகமும் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில், சிவபுரம் சிவன் கோயில் சிறப்பை பற்றியும், இக் கோயிலைக் கட்டிய மன்னர்கள். இராஜ இராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் காலத்தில், இக்கோயில் பல சிறப்புக் களுடன் விளங்கியது என்றும். மேலும் இக் கோயிலில் பணிபுரிந்த அர்ச்சகர்கள். ஓதுவார்கள். வீணை வாசிப்பவர், கணக்கர், திருவிளக்குகள் ஏற்றுபவர். திருவஸ்தீரம் துவைப்பவர்கள், கொடி பிடிப்பவர்கள் மற்றும் சாமரம் வீசுபவர்கள் என 102 பேர்கள், கோயில் திருப்பணியில் இருந்த- தாகவும், தினந்தோறும் பூஜையும், அன்னதானமும் மற்றும் மாதந்தோறும் திருவிழாக்களும் நடைபெற்றதாகவும், இதுகுறித்து கல்வெட்டுக்களில் குறிப்புக்கள் பதியப்பட்டு உள்ளதாகவும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்புத்தகம், சென்னை - எழும்பூரில் உள்ள, தமிழ் வளர்ச்சி கழகத்தில்ஒருபுத்தகம் ரூ. 55 / = என்ற விலையில் வழங்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு, இன்றளவும் தினமும் மக்கள் வந்து கோயிலில் இறைவனை தரினம் செய்து, இறையருளுடன், திருமணத்தடை நீங்கி, இல்லத்தில் திருமணம், சுபநிகழ்வுகள் நடைபெறவும் வேண்டுதல் செய்து, இறைவன் அருளால் அவர்கள் நினைத்த செயல்கள் இனிதே நிறைவேறி, பெறுதற்குரிய 16 செல்வங்களையும் பெற்றுச் செல்கின்றனர்.

மேலும், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்கு பஸ், கார் மற்றும் இருசக்கரத்தில் செல்பவர்கள்.... எந்த ஊரிலிருந்தும் வருபவர்களாக இருந்தாலும், சிவபுரம் ஊரை கடக்கும் போது, தவறாமல் ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் அருள்மிகு. குருந்த விநாயகருக்கு, வேண்டுதல் செய்து, தேங்காய் உடைத்து, கற்பூர தீப ஆரத்தி கொளுத்தி வழிபட்டு, வணங்கிச் செல்வார்கள். புத்திரப்பேறு அடைந்தவர்கள் பலர்... வேண்டுதல் செய்து, எடைக்கு எடை காசு போட்டு, வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். சிவபுர சிவனையும், கணபதியையும் வணங்குபவர்க்கு நினைத்த காரியங்கள் நிறைவேறவும், எல்லா நலங்களும், வளங்களும் பெற்று. இன்புற்று, நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் நிறைவாக பெற்று, நம்சந்ததிகள் பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் வேண்டுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

அடியார்களுக்கு அடியேன்சிவ. கண். தாமோதர அடியார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் - ஓய்வு சிவபுரம் கிராமம். : 6383329847























Post a Comment

0 Comments