Subscribe Us

header ads

காசி விஸ்வநாதர் ஆலயம் கஞ்சனூர்

 திருக்கயிலாய பரம்பரை மதுரை ஆதீனத்திற்க்கு சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில் அருகே காவேரி ஆற்றங்கரை செல்லும் சாலையில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருக்கும் காசி விசுவநாதர் ஆலயத்தின் தோற்றம் தான் இந்த புகைபடங்கள்...

விநாயகரும் சிவலிங்கமும் மட்டுமே காட்சி தருகின்றனர்...
அம்பாள் சிலையை சில ஆண்டுகளுக்கு முன்பே சமூக விரோதிகள் பாதம் மற்றும் பீடம் விட்டுவிட்டு உடைத்து எடுத்துசென்றுவிட்டனர்...
நந்தியம்பெருமானின் பீடம் மட்டுமே உள்ளது...
மகா மண்டபம் பட்டை செங்கற்களால் அழகுற அமைந்துள்ளது...
இன்றைய நிலமை பாதி இடிந்து மீதி நினைவு சின்னமாய் நிற்கிறது...
சுற்றுசுவர்கள் இடிந்து ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பாய் உள்ளது...
கஞ்சனூர் திருக்கோயிலுக்கு வரலாற்று தொடர்புடைய திருக்கோயில்...
கோயில் இல்லாத பல ஊர்களை சேர்ந்தவர்கள் குடந்தை பக்கம் வந்து வியந்து நிற்க...
இங்கு நாம் பொக்கிஷங்களை இழந்து வருகிறோம்...
இந்து அறநிலையத்துறை கண் விழிக்க...
ஈசன் நெற்றிக்கண் திறக்க வேண்டி விண்ணப்பம் வைப்போம்.









Post a Comment

0 Comments