ஓம்நமச்சிவாய
இயற்கையும் இறையும் சங்கமிக்கும் இடம்; இரண்டும் வெவ்வேறல்ல, ஒன்றே என்று ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் பயணம்; பெரிதினும் பெரிதானதைக் கண்டடைய அதீத பிரயத்தனமும், அசைக்கமுடியாத நம்பிக்கையும், அளவில்லாப் பொறுமையும் தேவை என்று பாடம் நடத்தும் மலையேற்றங்கள்... ஆம், அதுதான் வெள்ளிங்கிரி யாத்திரை!
தற்பொழுது வெள்ளிங்கிரி மலை ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தென் கைலாயம் என்று அழைக்கப்படுகின்ற பூண்டி
வெள்ளிங்கிரி மலை பிப்ரவரி 2024 முதல் மே 2024 மாதம்
இறுதி வரை பக்தர்கள் வெள்ளிங்கிரி ஆண்டவரை சென்று தரிசித்து வரலாம்
``ஏழு மலைகளைத் தாண்டி மலை உச்சியில் அமைந்திருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்தால், வடக்கே இமயத்துக்கு கயிலாய யாத்திரை சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்லும் பக்தர்கள், வெள்ளிங்கிரியை, `தென் கயிலாயம்’ என்றே போற்றுகிறார்கள். திருப்பதி, பழநி போன்று பேருந்து வசதிகளோ, விஞ்ச் வசதிகளோ வெள்ளிங்கிரி மலைக்குக் கிடையாது. முழுக்க முழுக்க நடராஜா சர்வீஸ்தான்! மலைக்குமேல் மூலவரின் தரிசனம் உள்ளத்துக்குப் பலம் சேர்க்கும் எனில், மலைப் பயணமும் அந்த மலைகளில் வளர்ந்துதிகழும் மூலிகைகளும் நம் தேகத்துக்குப் பலம் சேர்க்கும். வேடிக்கையாகச் சொல்கிறார்கள்... `ஒரு முறை வெள்ளிங்கிரி மலை ஏறி வந்தால் ஆண்டு முழுவதும் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும்' என்று!
புதிதாக வெள்ளியங்கிரி யாத்திரை வருபவர்கள் 1டார்ச் லைட் ,2லிட்டர் தண்ணீர், வாழைஇலையில் மடித்த உணவுபொருட்கள்,குளுகோஸ் போன்றவை அவசியம்... யாத்திரைக்கு முன்னர் குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்னரே உங்கள் உடல்நிலையை தயார் படுத்திக்கொள்ளுங்கள் நடைபயிற்ச்சி சைக்கிள் பயிற்ச்சி அசைவஉணவுகளை தவிர்த்தல் குறிப்பாக மூட்டுவலி, இதயபிரச்சனை, ஆஸ்த்துமாபிரச்சனை, உள்ளவர்கள் பயணத்தை தவிர்ப்பது நல்லது.. ஏனென்றால் மலையேற்றம் யாத்திரை கடும்சோதணையை ஏற்படுத்தும் இறுதியில் தான் சிவபெருமானை தரிசிக்கமுடியும்..சிவபெருமானே மலையாக காட்சிதருவதால் தயவுசெய்து பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் அசுத்தம் செய்யாதீர்கள் புகைப்பிடிக்காதீர்கள் அனுமதிக்கப்பட்ட பாதையை தவிர மற்ற வனப்பகுதியில் செல்லாதீர்கள்.
0 Comments