21. அன்பு உடைமை
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவம் ஆய் அமர்ந்து இருந்தாரே.
அன்பு வேறு சிவம் வேறு என்று இரண்டாகக் கூறுவர் அறிவிலார். ஆனால் அன்பு தான் சிவம் என்பதை யாரும் உணராது உள்ளார்கள்; அன்பு தான் சிவம் என்று உணர்ந்த பின் அன்பு சொரூபமாய் "சிவம்" போன்று அமர்ந்து இருப்பார்கள்.
0 Comments