Subscribe Us

header ads

திருமந்திரம் - அன்புடைமை - 2/10

21 அன்புடைமை

பொன்னைக் கடந்து இலங்கும் புலித்தோலினன் 

மின்னிக் கிடந்து மிளிரும் இளம் பிறை 

துன்னிக் கிடந்த சுடுபொடி ஆடிக்கு 

பின்னிக் கிடந்தது என் பேர் அன்புதானே.

பொன்னைப் போன்ற மேனியை உடைய சிவபெருமான் புலித்தோலினை ஆடையாக அணிந்துள்ளான். முடிமேல் சூடியிருக்கும் இளம்பிறை மின்னி மிளிர்ந்து இருக்கிறது. சுடகாட்டில் சுடும் சாம்பலை பூசி கொண்டு, எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும் சிவபெருமான் மீது திருமூலன் ஆகிய நான் வைத்த அன்பின் காரணமாக இந்த அற்புதமான காட்சிகளைக் கண்டு அதிலேயே பின்னிப் பிணைந்து இருக்கின்றேன். மேலும் மேலும் என் அளவு கடந்த அன்பை சிவபெருமான் மீது வைத்துக் கொண்டே உள்ளேன்.

Post a Comment

0 Comments