கோவில்
எனப்படுவது ஆத்மாக்களுக்கெல்லாம் அரசனாகிய சிவபெருமான் உறைகின்ற இல்லம் ஆகும்.
இறைவன் அனைத்து இடத்திலும் வியாபித்து இருக்கின்ற போதிலும் மிகவும் சிறப்பாக திருக்கோயில்களில், உறைந்திருக்கின்றான். பூமியின் அடியில் எங்கும் தண்ணீர் இருந்த போதிலும் கிணற்றின் மூலமாகவே நாம் அதனைப் பெறுகின்றோம். அதைபோல் இறையருளை பெற நாம் திருக்கோயிலுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எந்த ஒரு திருக்கோயிலின் வரலாற்றை எடுத்துக் பார்த்தால் அந்த இடத்தில் ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள் தியானம் செய்த, அல்லது அவர்களது ஒடுக்கம் அமைந்த இடமாகவே காணப்படும்.
அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ காமேஸ்வரர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில் ஆகும். செங்கல்பட்டு மாவட்டம் அணைகட்டில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மடவிளாகம் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. இக்கோவில் 1000 ஆண்டு பழமையான கோயில். முழுமையாக கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
வியாக்கிரபாதர் என்ற முனிவர் வண்டுகள் தீண்டாத நல்ல மலர்களால் மட்டுமே சிவனை பூஜிக்க வேண்டும் என்று எண்ணி சிவபெருமானிடம் புலிக்காலை வரமாக பெற்றார். இவ்வாறு வரம் பெற்ற வியாக்கிரபாதர் இக்கோவிலின். கருவறை பின்புறம் அவரின் திருவடிவம் காணப்படுகிறது. இக்கோவிலில் புராணத்தின் படி வியாக்கிரபாதர் முனிவர் சிவபெருமானை வணங்கியுள்ளார்.
முகப்பில் கொடிமரம். கிழக்கு பார்த்த சுவாமி சன்னதி. கோஷ்ட மூர்த்திகள், நால்வர், பைரவர், நவகிரகம் ஆகிய சன்னதிகள் உள்ளன.
கோயில் திருக்குளங்கள் யம தீர்த்தம் மற்றும்
சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம் வில்வம்.
இரு கால பூஜை நடைபெறுகிறது.
இந்த கோவிலில் பிரதோஷம், வைகாசிவிசாகம், அருத்ரதரிசனம், கார்த்திகை தீபம், சிவராத்திரி போன்ற வழிபாடுகள் நடதப்படுகிறது.
தற்போது இந்த கோயில் மிகவும்
பரிதாபகரமான நிலையில் உள்ளது, சுற்றிலும் புதர்களும், வெளவால்கள் பறக்கின்றன, கோபுரகலசமும் இல்லை. கோயில் திருப்பணியை எதிர்நோக்கி காத்துள்ளது.
ஆலய அர்ச்சகர் திரு ஜெயவீர குருக்கள்
9787734627
0 Comments