Subscribe Us

header ads

களக்காட்டூர் அக்னீஸ்வரர் | Kalakkattur Agneeswarar temple


செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள களக்காட்டூர் என்ற   கிராமத்தில்நெல் வயல்களுக்கு நடுவே முற்காலச் சோழர் கட்டிய சிவன் கோயில் ஒன்று உள்ளது

அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அக்னீஸ்வர்ர திருக்கோயில் என்ற  திருநாமத்துடன்  புட்டேரி என்ற ஏரிகரையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 

இது ஒரு கற்கோயில். நான்கு சதுரம் கொண்ட கர்ப்பக்கிரகம்அந்தராளம் மூடப்பட்ட மண்டபம்தெற்கு முகமாக நுழைவு வாசல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தில் விமானம் இருந்ததற்கான அறிகுறி இருக்கிறது. தட்சிணாமூர்த்திபிரம்மா சிலைகளும் உள்ளன.

உருனி ஆழ்வார்: இந்த சிவனுக்கு ஊருணி ஆழ்வார் என்ற பெயர் இருக்கிறது. ஊருணி என்றால் சிறு குளம். இந்தப் பெயரை நிரூபிக்கும் வகையில் கோயில் அருகில் புத்தேரி என்னும் குளம் இருக்கிறது. இதன் புராணப்பெயர் சந்திரமேகத் தடாகம். சிவன் அக்னி வடிவானவர் என்பதால்அவரைக் குளிர் விக்கும் வகையில் இந்த ஊருணி தோண்டப்பட்டிருக்கிறது.

ஒரு முறை வாயுவருணன்அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து விட்டார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியவில்லை. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும்தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். சிவன் அவர்கள் முன்தோன்றி அக்னி பகவானை அங்கே அழைத்தார். அவர் இரண்டு முகம்மூன்று பாதம்நான்கு கொம்புஏழு கைஏழு ஜூவாலையுடன் வெளிப்பட்டார். சிவதரிசனம் பெறவேவாயுவருணனுடன் தர்க்கம் செய்வது போல் நாடகமாடியதாக தெரிவித்த அக்னிதனக்கு சிவன் காட்சியளித்த இடத்தில் ஒரு லிங்கத்தை வடித்து பூஜித்தார். அக்னிக்கு காட்சியளித்த அவருக்கு அக்னீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த சிவனுக்கு ஊருணி ஆழ்வார் என்ற பெயரும் இருக்கிறது.

இக்கோயில் கிழக்கு நோக்கிய கற்கோயில் ஆகும்.மண்டபத்தின் கிழக்கே கணபதி சன்னதி உள்ளது. லிங்கத்தின் முன்புறம் நந்திபகவான் ஒரு சிறிய சாளரத்தின் வழியாக சிவபெருமானை தரிசனம் செய்தபடி உள்ளார்

கர்ப்பக்கிரகத்தின் தேவகோஷ்ட சிற்பங்கள் மிகவும் அழகாக அமைந்துள்ளது.

தேவகோஷ்டத்தின் பின்புறம் பொதுவாக விஷ்ணு அல்லது லிங்கோத்பவர் சிலை இருக்கும். ஆனால் இங்கு அர்த்தநாரிஸ்வரர் மிகவும் சிறப்பு என்று கருதப்படுகிறது.

கணபதி துர்க்கை தெற்கே தட்சிணாமூர்த்திஅர்த்தநாரிபிரம்மா ஆகியோர் உள்ளனர்இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என Middle Chola Period என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காடன்மைந்தன் என்ற கிராம அதிகாரி தன்னுடைய ஊரில் இருக்கும் அக்னீஸ்வர்ர் கோயிலில் தன் மன்னர் பெயரில் அவர் நலத்திற்காக தொடர்ந்து விளக்கெரிக்க அனுமதி கேட்கஅதற்கு ராஜ ராஜன் தன் ஒருவர் நலத்திற்கு விளக்கெரிப்பதை விட இந்த நாட்டு மக்கள் நலத்திற்காக விளக்கேற்றுங்கள் என்று சமாதானம் செய்து அனுப்பஊருக்கு வந்த கிராம அதிகாரி தன் மன்னனின் விருப்பத்திற்கேற்ப நாட்டு மக்களுக்காக ஒரு விளக்கும்தன் விருப்பத்திற்கேற்ப தன் மன்னனுக்காக ஒரு விளக்கும் ஏற்றியதைக் குறித்த கல்வெட்டுகள் உள்ளது.

திருக்கோயில் தொடர்பு கொள்ள ராஜேந்திரன் ஐயா - 8825806065 Google Map : https://maps.app.goo.gl/DNhtBMJFz14yQHiXA









 

Post a Comment

0 Comments