நான்காம் திருமுறை
பாடல் 8
நமச்சிவாய என்ற மந்திரம், இருளை கெடுக்கும். நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று உலக ஆசைகளை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்கும். ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்தான நமச்சிவாய மந்திரமே.
இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே
விளக்கம்:
இல்=இல்லம். நமது உடல் உயிர் குடி கொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப்படுகின்றது. நமது உடலில் உள்ள மனத்தில் நமச்சிவாய மந்திரம் துதிக்கப்பட்டு ஞானவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டால் நம்மைப் பிணித்திருக்கும் அறியாமை என்ற இருள் விலகுகின்றது. சிவபிரான் சொற்களுக்குத் துணையாக இருக்கும் நிலை, இதே பதிகத்தின் முதல் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுடனும் சிவபிரான் கலந்து இருப்பதால் பல்லக விளக்கு என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments