Subscribe Us

header ads

சைவர்களின் அணிகலன் நமச்சிவாய மந்திரம்

நான்காம் திருமுறை

பாடல் 5

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே


விரதம் இருந்து தவம் செய்யும் முனிவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் விபூதியாகும்; 
அந்தணர்க்கு பெருமை சேர்ப்பது அவர்கள் நான்கு மறைகளையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல்; 
சந்திரனு சிவபெருமானைச் சரண் அடைந்து அவரது திருமுடியில் இடம் பெற்று இருப்பது அழகு.
சைவர்களாகிய நம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் அணிகலனாக விளங்குவது நமச்சிவாய மந்திரம் ஆகும்.



Post a Comment

0 Comments