81. சாய்ந்திருந்த சிவலிங்க திருமேனியை நேராக நிறுத்த சோழ மன்னன் தன் சேனைகளும், யானைகளும் வறுத்தமுறும் நிலையை தானும் அடையும் பொருட்டுதனது கழுத்தில் கயிறு போட்டு இழுத்த நாயன்மார் யார்? இந்நிகழ்வு நடந்த ஊர் எது?
குங்குலிய கலய நாயனார், திருப்பனந்தாள் திருத்தாடகை ஈச்சுரம்
82. திருத்தாண்டக சதுரர் யார்?
திருநாவுக்கரசர் (அப்பர்) நாயனார்
83. தனது ஒரே மகளின் திருமண நாள் அன்று கூந்தலை அரிந்து கொடுத்து, கஞ்சானூரில் அவதரித்த நாயன்மார் யார்? அவர் பிறந்த குடி எது?
மானக்கஞ்சாற நாயனார், வேளாண்மைகுடி
84. கஞ்சானூர் எங்குள்ளது? அங்குள்ள இறைவன் திருநாமம் என்ன?
மயிலாடுதுறை அருகில் ஆன தாண்டவபுரம் என தற்போது வழங்கப்படுகிறது. அருள்மிகு பஞ்சவட்டீஸ்வரர்
85. பஞ்சவடி என்றால் என்ன?
மயிரினால் செய்யப்பட்ட மயிர்கயிறு இஃது பூணூலுக்கு ஆகும்.
86. மானக்கஞ்சாற நாயனாரின் மகளை திருமணம் செய்ய வந்த மணமகன் பெயர் யாது?
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
87. அரிவாட்டய நாயனார் இயற்பெயர் யாது? அவர் அவதரித்த ஊர் எது? அஃது எங்குள்ளது?
தாயனார், கணமங்கலம், (திருத்துறைப்பூண்டி அருகில் தண்டலை நீனெறி என்ற பாடல் பெற்ற தலத்தின் அருகில் இவ்வூர் உள்ளது)
88. அரிவாட்டய நாயனார் இறைவர்க்கு திருஅமுது செய்ய தினம் கொண்டு சென்ற பொருட்கள் எவை?
செந்நெல்லில் எடுத்த அரிசி (சாதம்) சோறு, செங்கீரை, மாவடு
89. சிவபெருமான் அரிவாட்டாய நாயனாரின் கையை பிடித்து அருளி மாவடுவை கடிக்கும் ஓசை எவ்வாறு இருந்தது என சேக்கிழார் விரிக்கிறார்?
விடேல், விடேல் எனும் ஓசையை சிவபெருமான் திருவாய் மொழிந்தார்.
90. அரிவாட்டாயர் என அழைக்கக் காரணம் யாது?
அரிவாளால் தன் கழுத்தை அரிந்த நாயனாரை அரிவாட்டாய நாயனார் என அழைக்கப்பட்டார்.
91. ஆனாய நாயனார் அவதரித்த ஊர் எது? குலம் எது? அவ்வூர் எங்குள்ளது?
மங்கலம்.ஆயர்குலம் (லால்குடி) திருந்தவத்துறையிலிருந்து பூவாளூர்க்கு அருகில் உள்ளது
92. ஆனாய நாயனார் புல்லாங்குழலில் ஏழிசை கொண்டு வாசித்த மந்திரம் யாது?
திருஐந்தெழுத்து 'சிவாய நம'
93. சடமுக்தி பெற்ற நாயன்மார்கள் யாவர் ?
உடலோடு கூடிய முக்தி நிலை, ஆனாயர், கண்ணப்பர், சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி நாயனார், காரி நாயனார், சண்டேசுவரர், அமர்நீதி நாயனார்
94. ஆனாய நாயனாரை சிவபெருமான் ஆட் கொள்ள பயன்படுத்திய மரம் யாது?
மாலை போன்ற பூங்கொத்துக்கள் கொண்ட கொன்றை மரம்
95. மூர்த்தி நாயனார் அவதரித்த பதி யாது? சமணர்கள் சந்தனகட்டை கிடைக்காமல் மறைத்ததால் மூர்த்தி நாயனார் என்ன செய்தார்?
மதுரபுரி (மதுரை) சந்தன கட்டைக்கு பதிலாக தன முழங்கையை இரத்தம், நரம்பு வெளிவர தேய்த்தார்.
96. மும்மையால் உலகு ஆண்ட மூர்த்தி நாயனாரின் மும்மை சாதனங்கள் யாவை?
திருநீறும், உருத்திராட்சமும் சடைமுடியும் கொண்டு ஆட்சி செய்தார் 97. முருக நாயனார் (அ) திருநாவுக்கரச நாயனார் முக்தி பெற்ற தலம் (ஆ) சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இறைவர் தங்க செங்கல் கட்டிகளை தந்த பதி.
97. திருப்புகலூரில் தோன்றிய நாயன்மார் யார்? இப்பதியின் பெருமை யாது?
முருக நாயனார் (அ) திருநாவுக்கரச நாயனார் முக்தி பெற்ற தலம் (ஆ) சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இறைவர் தங்க செங்கல் கட்டிகளை தந்த தலம்
98. முருக நாயனார் முக்தி பெற்ற பதி யாது?
திருநல்லூர் பெருமணம். திருஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தில் சோதியுள் கலந்தார்
99. உருத்திர பசுபதி நாயனாரின் இயற்பெயர் யாது, அவதரித்த ஊர் எது? அஃது எங்குள்ளது? உருத்திரம் என்றால் என்ன?
பசுபதி, திருத்தலையூர் மயிலாடுதுறை அடுத்து கொல்ல மாங்குடியிலிருந்து 4 கி.மீ.ல் இப்பதி உள்ளது. ருத்ரம் என்பது யசூர் வேதத்தின் மைய பகுதியாகும். இம்மந்திரத்தை தொடர்ந்து நீருள் ஓதி வந்ததால் உருத்திர பசுபதியார் என பெயர் பெற்றார்.
100. திருநாளைப்போவார் அவதரித்த ஊர் எது? அவர் இயற்பெயர் யாது?
ஆதனூர், நந்தனார்
திருச்சிற்றம்பலம்
0 Comments