61. திருஆனிலை என்றால் என்ன?
ஆன் - பசு (காமதேனு இறைவனை வழிபட்டமையால் இப்பெயர் பெற்றது)
62. எறிபத்த நாயனார் வாழ்ந்த காலத்து கரூரின் மன்னர் யார்?
புகழ்ச்சோழ நாயனார்
63. ஈழக் குலச் சான்றோர் யார்? அவரது தொழில் யாது?
ஏனாதி நாத நாயனார், போர் பயிற்சி அளிப்பது
64. ஏனாதிநாயனாரிடம் போர் புரிந்தவன் யார்? எதற்காக போர் புரிந்தான்?
அதிசூரன். போர் பயிற்சித் தொழிலில் முதல் உரிமம் பெற
65. ஏனாதி நாயனார் திருநீறுடன் போரிட்ட அதிசூரனை கண்டவுடன் என்ன செய்தார்?
ஆயுதம் இல்லாதவனை கொன்றான் என்ற தவறான பெயர் சிவனடியார்க்கு (அதிசூரன்) வரக்கூடாது யென வாள், கேடயத்தை சண்டையிடுவதை போல் பாசாங்கு செய்தார்.
66. காளத்தி உத்தமர்க்குக் கண் அப்பிய நாயன்மார் யார்? அவர் அவதரித்த ஊர் யாது?
கண்ணப்ப நாயனார் - பொத்தப்பி நாடு. உடுப்பூர்
67. கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் யாது? அவரது தாய், தந்தை பெயர் யாது?
திண்ணன், தந்தையார், நாகன், தாயார் - தத்தை
68. திண்ணன் கன்னிவேட்டைக்கு சென்ற காரணம் யாது? கன்னி வேட்டை என்றால் என்ன?
திண்ணனின் தந்தை நாகன் வயது முதிர்ந்ததால் வேட்டைக்கு செல்ல இயலாததால் திண்ணன் வேட்டைக்கு சென்றார். முதலில் செல்லும் வேட்டைக்கு கன்னி வேட்டை என்பர்.
69. திண்ணனாருடன் வேட்டைக்கு சென்ற மெய்க்காவலர்கள் யார்?
நாணன், காடன்
70. காளத்தி மலையின் வீற்றிருக்கும் இறைவன் திருநாமம் யாது?
குடுமித்தேவர்
71. திண்ணனார் குடுமித்தேவரை கண்டவுடன் அவர் நிலை எது ?
வேகமாய் ஓடி தழுவினார், மோந்து நின்றார் மயிர்கால் புளகம் பொங்க கண்ணீருடன் நின்றார்
72. குடுமித்தேவரை வழிபட்டு வந்த முனிவர் யார்?
சிவகோசரியார்
73. திருக்காளத்தி அப்பருக்கு திண்ணனார் எக்கண்ணில் முதலில் கண் அப்பினார்?
வலக்கண்ணில் அப்பினார்
74. மற்றொரு கண்ணையும் அப்ப திண்ணனார் என்ன செய்தார்?
தனது மறு கண்ணையும் எடுத்தால் சுவாமியின் இரத்தம் பெருகும் கண்ணைக் காண இயலாதுயென இடது காலை இரத்தம் பெருகும் கண்மீது ஊன்றினார்.
75. சிவபெருமான் கைபிடித்து அருளிய நாயன்மார்கள் யாவர்?
அரிவாட்டாயர், கண்ணப்பர், கலியர் ஆகிய நாயன்மார்களாகும்
76. குங்குலியம் என்றால் என்ன?
வாசனை மிகுந்த மரப்பிசின் (புகைபோட உதவும்)
77. குங்குலிய கலய நாயனாரின் இயற்பெயர் எது? அவதரித்த ஊர், மரபு யாது?
கலயர், திருக்கடவூர், அந்தணர்
78. குங்குலிய கலயரிடம் அவரது மனைவியார் தன் தாலியை கொடுத்து வாங்கி வரச் சொன்ன பொருள் யாது?
நெல் (குழந்தை சுற்றத்தாரின் பசியைப் போக்க
79. அளகை வேந்தன் யார்?
குபேரன் (இருநிதி கிழவோன்)
80. அல்லொத்த கண்டன் யார்?
சிவபெருமான் (அல் - இருள். இருள் போன்ற கருப்பு நிறத்தை உடைய கண்டம்
திருச்சிற்றம்பலம்
0 Comments