41.சிவபெருமான் பெயரிட்டு அழைத்த நாயன்மார்கள் யாவர்?
அ. இயற்பகை நாயனார்
ஆ. கண்ணப்ப நாயனார்
இ. காரைக்கால் அம்மையார்
ஈ.சண்டேசுவர நாயனார்
உ திருநாவுக்கரசர்
ஊ. சிறுத்தொண்டர்
எ. பூசலார் ஏ.சுந்தரர்
42. சிவபெருமான் இயற்பகை நாயனாரை எத்தனை முறை 'ஓலம்' என்று அழைத்தார்?
ஆறுமுறை
43. இளையான்குடி மாற நாயனாரின் இயற்பெயர் யாது? அவர் பிறந்த ஊர் எது?
மாறன், இளையான்குடி, (பரமகுடி அருகில் உள்ளது)
44. இளையான்குடி நாயனாரை சிவலோகம் சேர்த்த தொண்டு யாது? சிவலோகத்தில் நாயன்மார்க்கு சிவபெருமான் தந்த பணி எது?
வறுமைபட்ட காலத்திலும் சிவனடியார்க்கு விதைத்த முளை நெல் எடுத்து அமுது செய்வித்தார். குபேரனுக்கு நிதி கொடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்தார்
45. மெய்ப்பொருள் நாயனாரின் மரபு யாது? பிறந்த ஊர் எது?
மலாடர் மன்னன், திருக்கோயிலூர்
46. பொய் வேடம் கொண்டு வந்த அடியவரை எவ்வாறு மெய்ப்பொருள் நாயனார் உணர்ந்தார்?
உங்கள் நாயகனார் என கூறிய சொல் பொய் அடியார் என்பதை விளக்கியது
47. மெய்காவலரின் செயலை தடுத்து மெய்ப்பொருள் நாயனார், கூறிய வார்த்தை எது?
'தத்தா நமர்' மெய்காவலரை நோக்கி இவர் நம்மவர் எனக் கூறி ஊர் எல்லை வரை பாதுகாத்து விடுத்து வரும்படி கூறினார்.
48. மெய்ப்பொருள் நாயனார் நமக்கு கூறும் அறிவுரை யாது?
"பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர்' சிவனடியார்களை என்றும் அன்பு செலுத்தி வாழுங்கள் என கூறினார்.
49. சிவபெருமானிடம் வேண்டி பரசு பெற்ற தவமுனிவர் யார்?
பரசுராமன்
50. விறன்மிண்ட நாயனார் பிறந்த ஊர் யாது? அவர் எக்குலத்தைச் சார்ந்தவர்?
செங்குன்றூர் செங்கனூர் (கேரளா) வேளாண்மை மரபினர்)
51. சிவபெருமானுக்கும், சுந்தரருக்கும் 'புறகு' ('கா' விட்ட) என்று உரைத்த வரும், சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டர் தொகை பாடுவதற்கு காரணமாய் இருந்த நாயன்மார் யார்?
விறன்மிண்ட நாயனார்
52. அமர்நீதி நாயனாரின் பிறந்த ஊர் யாது? அவர் செய்த தொழில் யாது?
பழையாறை (கும்பகோணம் அருகில்) வணிகர்
53. அமர்நீதி நாயனார் தொண்டு செய்ய சென்ற ஊர் எது?
திருநல்லூர் அங்கு அடியவர்களுக்கு உணவும், கந்தை, கிழும் துணி, கோவணமும் கொடுத்து வந்தார்
54. சிவபெருமான் எடை தராசில் வைத்த கோவணத்திற்கு இணையானது எது?
அமர்நீதி நாயனார் தனது மனைவி, மகனுடன் 'திருநீறு மீது தாம் கொண்ட அன்பு உண்மையானால் இத்தராசு நேர்பட' என கூறி திருஐந்தெழுத்து ஓதி தராசில் ஏறினார். (தராசு நேரானது)
55. அமர்நீதி நாயனாரும் அவரது மனைவி, மகள் ஏறிய தராசு எவ்வாறு மாறியது? எங்கு சென்றது?
விமானமாக மாறி சிவலோகத்தில் சேர்ந்தது.
56. சோழமன்னர்களின் தலைநகரங்கள் எவை எவை?
காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், கரூர், சேய்ஞ்லூர் இவ் ஐந்து இடங்களில் சோழர்கள் முடிசூட்டி கொள்வார்
57. எறிபத்த நாயனார் அவதரித்த ஊர் எது? அவர் எப்போதும் வைத்திருந்த ஆயுதம் யாது?
கருவூர், பரசு
58. திரு ஆனிலை பசுபதீஸ்வரர்க்கு தினமும் மலர் கொடுத்த வந்த அடியவர் யார்?
சிவகாமி யாண்டார்
59. திருப்பள்ளித்தாமம் என்றால் என்ன?
பூ, இலை, வேர், சேர்ந்ததே
60. சிவகாமியாண்டர் எத்தனை முறை 'சிவதா' என்று ஓலமிட்டார்?
பத்து முறை "சிவதா" என்றார்.
திருச்சிற்றம்பலம்
0 Comments