Subscribe Us

header ads

சைவ வினா விடை - 2

 21.சுந்தரர் குழந்தை பருவத்தில் அன்பாக மகனாக ஏற்றுக்கொண்ட மன்னவர் யார்?

நரசிங்க முனையரையர்




 22. சிவபெருமான் சுந்தரரை முதலில் தடுத்தாட்கொண்ட ஊர் யாது? அம்மணவிழாவின் மணப்பெண்ணின் தந்தை பெயர் என்ன?

புத்தூர் (மணம் வந்த புத்தூர் பின்னாளில் மணம் தவிர்த்த புத்தூர் என மருவியது).

சடங்கவி


 23. "பித்தா பிறைசூடி" எனும் பதிகத்தை சுந்தரர் பாடிய திருக்கோயில் யாது?

திருவெண்ணெய்நல்லூரில் உள்ள திருவருட்துறை எனும் சிவாலயம்


 24.சுந்தரர், சிவபெருமானிடம் எவ்வாறு உருகுகிறார்?

ஈன்ற தாய்பசு கனைப்பு கேட்ட கன்று போல கதறினார்


25. சிவபெருமான், முதியவராக வந்து, சுந்தரரின் தலைமேல் தன் திருவடியை பதித்த இடம் யாது?

சித்த வடமடம் (பண்ருட்டி அருகில் உள்ள சிவப்பதி) 


26. தில்லையில் கூத்தப்பெருமான் திருக்கோயிலில் சுந்தரர் சென்ற வாயில் திசை யாது?

வடக்கு திசை 


27. தம்பிரான் தோழர், நாவலூரன், நம்பிஆரூரன், ஆளுடைய நம்பி, சைவ முதல் திருத்தொண்டர். விடையவர்க்கு அன்பர் என இவ்வாறு அழைக்கப்பட்ட அடியவர் யார்?

சுந்தரமூர்த்தி நாயனார் 


28.உருத்திரகணிகை மரபில் தோன்றி சுந்தரரின் மனைவியானவர் யார்? அவர் தோன்றிய ஊர் யாது?

பரவையார், திருவாரூர் 


29. சிவபெருமான் சுந்தரரை நோக்கி இவரை நீ அடைவாய் என கூறியது யாரை?

திருவாரூர் சிவனடியார்களை 


30. சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகை பதிகத்தின் முதல் வரியை சிவபெருமானே எடுத்து கொடுத்தார் அவ்வரி யாது?

"தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என எடுத்து இசைத்தார் சிவபெருமான் 


31. திருத்தொண்டர் தொகையில் மூன்று வரியில் பாடப்பெற்ற அடியவர் யார்?

திருஞானசம்பந்தர், சண்டேசுவரர்


32. 'எரிமூன்றோம்பி' வாழ்வர் என யாரை சேக்கிழார் குறிப்பிடுகிறார். அவை மூன்று யாது?

ஆகலினியம், தட்சினக்னியம், காடுகபத்தியம் 


33. திருநீலகண்ட நாயனாரின் பிறந்த ஊர் யாது?

தில்லை (சிதம்பரம்) 


34. திருநீலகண்ட நாயனாரின் தொண்டு யாது?

அடியார்க்கு திருஓடு கொடுப்பது 


35. திருநீலகண்ட நாயனார் எப்போதும் சொல்லும் சிவபெருமானின் திருப்பெயர் யாது?

திருநீலகண்டம் 


36. திருநீலகண்ட நாயனாரை சிவபெருமான் ஆட்கொண்ட வழி எது? 37. திருநீலகண்ட நாயனார் சத்தியம் செய்த இடம் எது?

திருவோடு கொடுத்து அதனை மறைய செய்து சத்தியம் செய்ய கூறி ஆட்கொண்டார் 


37. திருநீலகண்ட நாயனார் சத்தியம் செய்த இடம் எது.

திருப்புலீச்சரம் (இத்திருக்கோயில் சிதம்பரத்தில் உள்ளது) இளமை ஆக்கினார் கோயில் ஆகும் 


38. இயற்பகை நாயனாரின் திருஅவதாரம் தலம் எது? அவர் செய்த தொழில் என்ன?

பூம்புகார், வணிகர் 


39. சிவபெருமான் இயற்பகையாரை ஆட்கொள்ள எவ்வேடம் தரித்து வந்தார்?

தூர்த்த வேடம் (திருநீற்றுடன் காமவேட்கையால் பல தவறுகளை செய்தவர் போன்ற அங்க குறிகள் கொண்ட வடிவம்)


40.செய்வதற்கரிய செயல் செய்த தீரனே' என சிவபெருமான் கூறும் நாயன்மார் யார்?

இயற்பகை நாயனார்




Post a Comment

0 Comments