Subscribe Us

header ads

சைவ வினா விடை - 1

 1.  63 நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் பெரியபுராணம் என அழைக்கப்படும் நூலின் வேறு பெயர்கள் யாது? பெரியபுராணத்தின் முதல் பாடலான 'உலகெலாம்' என தொடங்கும் பாடலில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?


திருத்தொண்டர்புராணம், 63 எழுத்துக்கள் உள்ளன.

2. பெரியபுராணத்தினை இயற்றியவர் யார்?

அருண்மொழித்தேவர் என்ற சேக்கிழார் பெருமான் (சேக்கிழார் என்பது மரபின் பெயர்) குன்றத்தூர்


3. சேக்கிழார் பெருமானின் உடன் தோன்றியவர் பெயர் யாது?

பாலறாவாயன்


4. பாலறாவாயன் என அழைக்கப்பட்ட நாயன்மார் யார்?

திருஞானசம்பந்தர்


5.  சிவனடியாரின் இலக்கணம் பற்றி சேக்கிழார் எங்ஙனம் உரைக்கிறார்?

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்


6. சேக்கிழார், எந்த மன்னவரின் மந்திரி சபையில் பணியாற்றினார்? காலம் யாது?

இரண்டாம் குலோத்துங்க சோழன் என்ற அநபாயன் காலம் கி.பி. 1133-1150


7. சுந்தரர் வரலாற்றை கயிலையில் கூறிய உபமன்னிய முனிவர் யார்?

வியாக்கிர பாத முனிவரின் புதல்வர் (குழந்தையாக உபமன்ய முனிவர் இருந்த போது பாலுக்காக அழுத போது பால்கடலை சிவபெருமான் அருளினார்).


8. அநபாயசோழன், சேக்கிழார் பெருமானுக்கு கொடுத்த பட்டம் யாது?

தொண்டர்சீர் பரவுவார், உத்தமசோழ பல்லவர்


9. பெரியபுராணத்தின் ஆதார நூல்கள் யாது?

அ. சுந்தரர் பாடிய திருத்தொண்டர்தொகை

ஆ. நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திரு அந்தாதி

இ. முதல் ஏழு திருமுறைகள்


10. பெரியபுராணம் பன்னிரு திருமுறையில் எந்த திருமுறையில் இடம் பெற்றுள்ளது? அதில் மொத்த பாடல்கள் எத்தனை?

13 சருக்கம் (பகுதி) 4253 பாடல்,

12ம் திருமுறையாக பெரியபுராணம் இடம் பெறுகிறது


11.  ஆயிரம் சூரியன் ஒளி போன்று பிரகாசித்து கயிலைக்கு சென்ற நாயன்மார் யார்?  

சுந்தரமூர்த்தி நாயனார்


12. பூங்கோயில் என பெயர் பெறும் பதி யாது? அங்குள்ள அடியவர் தங்கிய மண்டபத்தின் பெயர் என்ன?

திருவாரூர்,

திருக்கோயிலில் உள்ள தேவாசிரியன் மண்டபம் சிவனடியார்கள் திருநீறு மிக பொழிந்து ஐந்தெழுத்தை ஓதும் தேவாசிரிய மண்டபம்


13. திருவாரூர் இறைவனின் திருநாமம் யாது?

புற்றிடம் கொண்ட நாதர், தியாகராஜ பெருமான், வீதிவிடங்க பெருமான் - திருவாரூர்


14. சுந்தரர் பெற்றோர் யாவர்?

சடையனார். இசை ஞானி


15. சுந்தரர் அவதரித்த ஊர் யாது?

திருநாவலூர், விழுப்புரம் தாண்டி கெடிலம் கூட்டு ரோடுலிருந்து 2 கி.மீ. இப்பதி உள்ளது


16. "மாதவம் செய்த தென்திசை" என சிவபெருமான் மொழிந்ததற்கு சான்றாக விளங்கும் திருக்கோயில்கள் யாது?

அ திருத்தில்லை (திருமூலநாதர் திருக்கோயில்)

ஆ திருவாரூர் (புற்றிடங்கொண்ட பெருமான் கோயில்)

இ காஞ்சி (திருஏகாம்பரேசுவர்கோயில்)

ஈ திருவையாறு (ஐய்யாறப்பர் திருக்கோயில்)

உ திருத்தோணிபுரம் (திருத்தோணியப்பர் திருக்கோயில்)


17. சுந்தரமூர்த்தி நாயனாரின் இயற்பெயர் யாது?

நம்பி ஆரூரன்


18. சுந்தரர் அவதரிக்கும் முன்பு கயிலையில் அவரின் திருநாமம் யாது?

ஆலால சுந்தரன்


19. கயிலையில் சுந்தரர், விருப்பம் கொண்ட பெண்களின் பெயர் என்ன?

அனிந்திதை, கமலினி


20. சேக்கிழார் பெரியபுராணத்தில் திருமலை, திருநாட்டு, திருநகரம் என குறிப்பிடுவது எவை?

திருமலை திருகயிலாயம் திருநாடு - சோழ வளநாடு

திருநகரம் - திருவாரூர்



திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments