Subscribe Us

header ads

திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக அழைப்பிதழ்

திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலோடு இணைந்த திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக அழைப்பிதழ்

நாள் 21.02.2024 புதன்கிழமை 

நேரம் காலை 09.00-09.40 மணிக்குள்

அன்புடையீர்!

உலகமெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவனான சிவபெருமான் திருநடனம் புரியும் ஐம்பெரும் சபைகளுள் முதன்மையான இரத்தின சபையை உடையதும் காளியுடன் போட்டியின்றி ஊர்த்துவ தாண்டவம் புரிந்ததும் காரைக்கால் அம்மையார் இறைவன் திருவடிக்கீழ் என்றும் பாடிக்கொண்டிருக்கும் பேறுபெற்றதும், தொண்டை நன்னாட்டின் தேவாரத்திருத்தலங்களுள் 15-ஆவது தலமாக விளங்குவதும் திருநாவுக்கரசு சுவாமிகள் திருஞானசம்மந்த சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், காரைக்காலம்மையார், அருணகிரிநாதர், பட்டிணத்தார் ஆகிய பெருமக்களால் பாடப்பெற்றதும் முஞ்சிகேசர், கார்கோடகர் ஆகிய முனிவர்கள் அருள்பெற்றதும் முருகப்பெருமான் நேரில் தரிசனம் செய்ததுமான திருவாலங்காடு திருத்தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வண்டார்குழலி உடணுறை அருள்மிகு வடாரண்யேஸ்வரசுவாமி பெருமானுக்கு நிகழும் சோபகிருது வருடம் மாசி மாதம் 9-ம் தேதி 21.02.2024 புதன்கிழமை வளர்பிறை துவாதசி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தல் காலை 9.00 மணிக்குமேல் 9.40 மணிக்குள் மீன லக்கினத்தில்

கும்பாபிஷேகம்

இறைவன் திருவருளால் நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக வந்திருந்து கும்பாபிஷேக வைபவத்தை கண்டுகளித்து எல்லாம் வல்ல வடாரண்யேஸ்வர பெருமானின் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.



Post a Comment

0 Comments