Subscribe Us

header ads

மோன மந்திரம் - அசபை - பேசா எழுத்து - திருமந்திரம் 4ம் தந்திரம் பாடல் 6


பாடல் எண் :
6

தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும் 

தானே அகார உகாரம் அதாய் நிற்கும் 

தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் 

தானே தனக்குத் தராதலம் தானே.


உலகைக் கடந்து நிற்கும் பேரொளியும் அவனே; உலகப் பொருட்களுக்குள் தத்துவமாய் கலந்திருப்பவனும் அவனே. ஓம்கார வடிவினனான அவன், உலகை இயக்கும் ஐந்தொழில் நடனத்தை ஆடுபவனாகவும், அந்த நடனம் நிகழ்வதற்குத் தேவையான அம்பலமாக தானே இருப்பவனாகவும் விளங்குகிறான் சிவபெருமான் என்று திருமூலர் பாடி அருளியுள்ளார். பிரணவ தத்துவமாகிய அசபை, உலகை இயக்குவதற்கும் எல்லாவற்றிலும் நிறைந்து நிற்பதற்கும் காரணம். அது கூத்தப்பெருமானின் திருவருள் என்னும் பேரொளி ஆற்றல்.

 

Post a Comment

0 Comments