Subscribe Us

header ads

மோன மந்திரம் - அசபை - பேசா எழுத்து - திருமந்திரம் 4ம் தந்திரம் பாடல் 5

 


தாண்டவம் ஆன தனி எழுத்து ஓர் எழுத்து 

தாண்டவம் ஆனது அனுக்கிரகத் தொழில் 

தாண்டவக் கூத்துத் தனி நின்ற தற்பரம் 

தாண்டவக் கூத்துத் தமனியம் தானே.


திருக்கூத்துக்கள் ஒப்பில்லாத திருவைந்தெழுத்தின் அருள்கூத்து ஆகும். அக்கூத்தினை அருளுபவன் முழுமுதற் சிவபெருமான் மட்டுமே. அது நிகழும் இடம் ஆருயிர்களின் நெஞ்சகம் அது பொன்னம்பலம். "தாண்டவம்" என்பதன் உண்மைப் பொருள் அனுக்கிரகம் புரியும் ஒரு தொழிற்பாடாகும்; தாண்டவக் கூத்திலே தற்பரம் ஆகிய இறையவர் தனித்தே நிற்பர். தற்பரம் என்பது மேலானவற்றிற்கெல்லாம் மேலானது: தாண்டவக் கூத்து என்றும் தனித்துவம் ஆனது. இது தூய வெறு வெளி யிலேயே நிகழும். அசபை என்பது கூத்தப்பெருமானது வடிவமான ஐந்தெழுத்து, இத்திருக்கூத்து நிகழுமிடம் பொன்னம்பலம்.

Post a Comment

0 Comments