Subscribe Us

header ads

மோன மந்திரம் - அசபை - பேசா எழுத்து - திருமந்திரம் 4ம் தந்திரம் பாடல் 7



தராதல மூலைக்குத் தற்பர மாபரன் 

தராதலம் வெப்பு நமவாசிய ஆம் 

தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் 

தராதல யோகம் தயா வாசி. ஆமே.

சர்வ பிரபஞ்சங்களுக்கும், அவற்றின் மூலத்திற்கும் சிவபெருமானே தலைவர். சர்வ பிரபஞ்சங்களினதும், அணுக்களினதும் மூலமந்திரம் "நமவாசிய" ஆகும்; சர்வ பிரபஞ்சங்களினதும், அணுக்களினதும் செயற்பாடு "வாசிய" ஆகும்; சர்வ பிரபஞ்சங்களுக்கும் அணுக்களுக்கும் தாயாகச் சிறந்த யோகமாக விளங்குவது "வாசி" யோகம் அல்லது "சிவ" யோகம் ஆகும். தராலம் என்பது உலகம் அல்லது அனைத்தையும் தாங்குகின்ற இடம். அசபை என்ற திருவைந்தெழுத்து, மூலாதார மண்டலத்தில் நமசிவாய என்றும், அதற்குமேல் அக்கினி மண்டலத்தில் நமவாசிய என்றும், அதற்குமேல் சூரிய மண்டலத்தில்  வாசிய என்றும், அதற்குமேல் சந்திர மண்டலத்தில் வாசி என்றும் நிற்கும் என்பது இதன் தெளிபொருள். 

Post a Comment

0 Comments