ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும் அத்தாண்டவம்
ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே.
தில்லைப் பொன்னம்பலத்தில் பொன் மயமான வெறு வெளி அற்புதம் நிறைந்தது அது ஆனந்தம் ஆனது: இறைவர் வெறுவெளியில் ஆடும் "திருக்கூத்து" "அனவரத தாண்டவம்". இவ் அனவரத தாண்டவம் ஊழிக்காலம் முழுவதும் இடையறாது நிகழும் திருக்கூத்து. அற்புதமான, அருமையான வேறு தாண்டவங்களும் சங்கார காலத்தில் நடைபெறும். அவை அற்புதக்கூத்து, ஆனந்தக்கூத்து, அனவரதக்கூத்து, ஊழிக்கூத்து, பேரொடுக்கக் கூத்து என்பன என்று திருமூலர் பாடியுள்ளார்.

0 Comments