Subscribe Us

header ads

பத்தாம் திருமுறை - முதல் தந்திரம் - 2.சிவபரத்துவம் - பாடல் - 29/56

பத்தாம் திருமுறை - முதல் தந்திரம் - 2.சிவபரத்துவம் - பாடல் - 29/56 பத்தாம் திருமுறை - சிவபரத்துவம்

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

2.சிவபரத்துவம்

பாடல் - 29/56

பதிபல வாயது பண்டு இவ்வுலகம்
விதிபல செய்து ஒன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சின் உள் வாடுகின்றாரே.

பண்டைய காலத்தில் இருந்து பலவிதமான தெய்வங்களை இந்த உலகத்தில் உள்ளவர்கள் வணங்கினார்கள். அவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வரைமுறைகள் விதிமுறைகளை வகுத்தனர். பல விதிமுறைகளை வகுத்தும் பலவிதமான துதிகளையும் தோத்திரங்களையும் இசையோடு பாட வல்லவர்கள் கூட உண்மை என்னவென்று உணராமல் உண்மையான ஞானத்தை அடைய முடியாதவர்கள் நெஞ்சத்தில் அமைதி இல்லாமல் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.

Post a Comment

0 Comments