Subscribe Us

header ads

பத்தாம் திருமுறை - முதல் தந்திரம் - 2.சிவபரத்துவம் - பாடல் - 28/56

பத்தாம் திருமுறை - சிவபரத்துவம்

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

2.சிவபரத்துவம்

பாடல் - 28/56

தேவர் பிரான் நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவு பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருட் பாடலும் ஆமே.

தேவர்களுக்கு எல்லாம் தலைவரும், பத்துத் திசைகளையும் கடந்தே இருப்பவருமான எம் தலைவர் சிவபெருமான்; விரிந்து பரந்து நீண்ட குளிர்ச்சியான ஏழு உலகங்களையும் கடந்து நிற்கும் எம் தலைவர். இவ்வாறு அனைத்தையும் கடந்தே நிற்கும் எம் இறைவரின் தன்மையை அறிந்து, உணர்ந்து துதிப்பவர் ஒருவரும் இல்லையே; திருமூலனாகிய நானோ, இறைவரை அவரது அருளாலே பாடல்களால் பரவுகின்றேன்.

Post a Comment

0 Comments