மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேத அகத்தான் ஒக்கும்
பண் அகத்தின் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித் தேனே.
மண்ணுலகத்தவர், வானுலகத்தவர், விண்ணுலகத்தவர் என யாவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்ப நின்று அருள்புரிபவனாகிய சிவபெருமான் விரும்புவது இசை என்பதை உணர்ந்து, அவன் அருளாலே அவனைப் பாடித் துதிக்கின்றேன் என்பது இத்திருமந்திரத்தின் கருத்து. துதிக்கும்பொழுதும் நான் என்ற முனைப்புடன் துதியாது, இப் பேறும் அவனது அருளால் கிடைத்தது என அவனது அருள்வழி நின்று துதித்தல் வேண்டும் என்று, கண்ணகத்தே நின்று காதலித்தேனே என்றார் திருமூலர்.
0 Comments