தேய்ந்தற்று ஒழிந்த இளமை கடைமுற
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.
மனிதன் பிறந்து வளர்ந்து உடலும் தேய்ந்து இளமை பருவம் மாறி முதுமை பருவம் அடைந்து ஒர் நாள் இறந்து போகின்ற இயற்கையின் விதிகளை அறிந்து கொள்ளுங்கள். அறிந்துகொண்ட பின் சிவபெருமான் திருமுடியில் இருந்து பாய்ந்து வரும் கங்கையைத் சூடிக்கொண்டிருக்கும் இறைவனே நிரந்தரமானவன் என்பதை உணர்ந்து, சிவனை சென்று அடையத் தேவையானற்றை கற்று உயிர் உடலில் இருக்கும்போதே இறைவனைச் சென்றடையுங்கள்.
0 Comments