Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை 4/10

பத்தாம் திருமுறை - இளமை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

7. இளமை நிலையாமை

பாடல் - 4/10

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.

முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய்போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.

Post a Comment

0 Comments