Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை 7/25

பத்தாம் திருமுறை - யாக்கை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

5. யாக்கை நிலையாமை

பாடல் - 7/25

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்று அத்தா என்னத் திரிந்திலன் தானே.

சிறந்த ஆண்மகன் ஒருவன் தன் முயற்சியால் பெரும் பொருள் சம்பாதித்தான். பலரும் வியக்கும் வண்ணம் வெட்ட வெளியான இடத்தில் பல அடுக்கு மாளிகையைக் கட்டினான். பின் ஊர் அறிய ஒரு பல்லக்கு செய்து அதில் ஏறி, ஊரில் உள்ளோர்க்கு தானங்கள் பல வழங்கினான். அவனது உடலை விட்டு உயிர் பிரிந்த பின், ஊரார் நின்று தலைவனே என்று கூப்பிட்டுக் கதறியும் அவன் திரும்பாமலே போய்விட்டான். எவ்வளவு பெரிய உயர்ந்தோர், பணக்காரர் ஆக இருந்தாலும் இறந்தார் என்னும் இகழ்ச்சியைப் பெறாதவர் இல்லை. ராஜபோகத்தில் வாழ்ந்தாலும் தான தர்மங்கள் எவ்வளவு செய்தாலும் உயிர் உடலில் நிற்காது என்பது திருமூலர் வாக்கு.

Post a Comment

0 Comments