வாசந்தி பேசி மணம் புணர்ந்து அப்பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்
பாசம் தீச் சுட்டுப் பலி அட்டினார்களே.
ஆணும், பெண்ணும் இனிமையான மொழிகள் பேசித் திருமணம் செய்து கொள்வார்கள். இருவரும் பின்னர் ஒன்று கூடிக் கொள்வார்கள்; காலப்போக்கில் அன்பு, நேசம், பாசம் என்ற உறவு சலித்து விட்டது என்பார்கள். நாள்செல்லச் செல்ல ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர்கள். மரணமான பின்னர், மலர்களை உடல் மேல் வைப்பார்கள். பாசப் பிரிவால் ஒலமிட்டு அழுவார்கள்; உடலை எடுத்துச் சென்று தீயினால் சுட்டு நீறாக்கி விட்டு அவரை தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.
0 Comments