Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை 5/25

பத்தாம் திருமுறை - யாக்கை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

5. யாக்கை நிலையாமை

பாடல் - 5/25

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே.

நோய் வந்து விட்டது. முன்பு செய்த வினை சூழ்ந்து கொண்டது. எலும்பு மூட்டுகள் வலு இழந்து விட்டன; மண்டை ஓடும் நன்கு பழுத்து விட்டது. உயிர் பிரிந்து விட்டது; என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கை வைத்துப் பார்த்தனர். சுவாசம் நின்று விட்டது என்று உறுதி செய்து கொண்டு, உடம்பை நன்றாக மூடி விட்டார்கள்; பிறகு உடலை துணியால் மூடி சுடுகாட்டுக்குக் கொண்டு போய், காக்கைக்கு உணவு வைத்து விட்டு, இறுதிக்கடன் செய்வார்கள் என்று திருமூலர் இப்பாடலில் பாடியுள்ளார்.

Post a Comment

0 Comments