Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை 6/25

பத்தாம் திருமுறை - யாக்கை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

5. யாக்கை நிலையாமை

பாடல் - 6/25

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடும் மந்தணம் கொண்டார்
இடப் பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.

உணவு சமைப்பதற்கு தேவையானவற்றை ஈட்டிக் கொண்டு வந்துார். வகை வகையாக சமைக்க சொன்னார். சமைத்தபின் அவ்வுணவை உண்டார்; அழகிய மனைவியுடன் உறவு கொண்டார்; இறைவா! இடப்பக்கம் தான் நோகின்றதே என்றார். அப்படியே படுக்கையில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்து விட்டார். பின் இறந்து போனார். இவ்வாறானது தான் வாழ்க்கை. உடலுக்கு நிலையாமை எப்போது வரும் என்ற காலத்தை அறிந்தார் யாரும் இல்லை; அதனால், செய்யவேண்டுவதை விரைந்து செய்தலே அறிவுடைமை என்பதாம் திருமூலரின் பாடல்.

Post a Comment

0 Comments