Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை 4/25

பத்தாம் திருமுறை - யாக்கை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

5. யாக்கை நிலையாமை

பாடல் - 4/25

காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே.

உடம்பாகிய இல்லத்தை தாங்கும் தூண்கள் இரண்டு. அது இரண்டு கால்கள் உள்ளன. இல்லத்தின் மேட்டு உத்தரம் முது கெலும்பு ஒன்று உண்டு. அந்த உத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகள் போல் விலா எலும்புகள் பக்கத்திற்குப் பதினாறாக முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை பலவகையான தோல்கள் உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப்பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீண்டும் வந்து முன்பு போல இந்த உடலினில் புக முடியாது என்று திருமூலர் இப்பாடலின் மூலம் அருளியுள்ளார்.

Post a Comment

0 Comments