Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை 3/25

பத்தாம் திருமுறை - யாக்கை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

5. யாக்கை நிலையாமை

பாடல் - 3/25

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

மனிதன் இறந்த உடன் உற்றார், உறவினர்கள், ஊர்மக்கள் எல்லாரும் ஒன்று கூடி மிகவும் அதிகமான சத்தமிட்டு அழுவார்கள்; அது வரை கூறி வந்த அவருடைய பெயரை சொல்லாமல், அந்த பெயரை நீக்கி, இறந்த உடம்பிற்குப் பிணம் என்று பெயரிட்டுக் கொள்வார்கள்; பின்னர் சூரை புற்கள் நிறைந்த சுடுகாட்டில் பிணத்தை எடுத்துச் சென்று சுட்டுவிட்டு; இறுதியாக தண்ணீரில் முழ்கி இறந்த மனிதனின் நினைவுகளை மெல்ல மெல்ல மறந்து விடுவார்கள் என்று இந்த பாட்டில் உடல் நிலையாமையை தெரிவிக்கிறார் திருமூலர்.

Post a Comment

0 Comments