பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.
மனித உடம்பு கூரையுடன் கூடிய ஒரு பானை, அந்த உடம்பு உழைத்துத் தளர்ந்து வீழ்ந்தால், அவ்வுழைப்பால் பயன் கொண்ட மனைவியரும், மக்களும் அவ்வுடம்பினுள் நின்ற உயிராகிய இல்லத்தலைவரைப் பின் தொடர்ந்து செல்லமாட்டார்கள். சுற்றமும் பொருளும் முதலாயினதாம் அவருடன் செல்லுமோ எனின், செல்லாது. அவர் மேற்கொண்டு செய்த தவமும், அதன் பயனாக உண்டாகிய ஞானமும் தான் அவருடன் செல்லும். வேறு எதுவும் அவரோடு உடன் செல்லாது.
0 Comments