இரண்டு மண் பாத்திரங்கள் ஒரே வகை மண்ணாலே செய்யப்பட்டது. அவற்றுள் ஒன்று தீயில் சுடப்பட்டது, மற்றொன்று தீயில் சுடப்படாதது. அந்த இரண்டு பாத்திரத்தின் மீது மழை விழும் போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப்படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். அது போல மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோலவே. மண்பாண்டத்தை மழைவரும் முன்னே சுட்டுக்கொள்ளுதல் போல, மக்கள் பிறப்பில் அமைந்த உணர்வை அப்பிறப்பிற்கு இறுதிக் காலம் வருதற்கு முன்னே அருளுணர்வு உடையதாக்கிக் கொள்க என்பது இப்பாட்டில் கூறப்பட்ட பொருளாகும்.
0 Comments