Subscribe Us

header ads

8. அயனை மாயா வடுச் செய்தத


திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள புராண நிகழ்வுகள்



8. அயனை மாயா வடுச் செய்தது


திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள 12. திருச்சாழல் - 8. அயனை மாயா வடுச் செய்தது


பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபெருமான் கிள்ளி எறிந்ததாகப் பல கதைகள் கூறப்படுகின்றன. 'அடிமுடிதேடிய' கதையுள் ஒன்று கூறப்பெற்றது.

சிவபெருமானினும் தான் உயர்ந்தவனாக எண்ணிப் பிதற்றியமையால், பெருமான் அவ்வாறு பிதற்றிய ஐந்தாவது தலையைக் கொய்து எறிந்தார் என்றும்;

பிரமன் காமக் குறிப்புடன், தன்னிடமிருந்து தோன்றிய ஒரு பெண்ணின் அழகைப் பார்த்தமையால், சிவபெருமான், அவ்வாறு பார்த்த கண்களையுடைய ஐந்தாவது தலையைத் துணித்தனர் என்றும்;

சிவனை, தனக்கு மகனாகப்பிறக்க வேண்டும் என்று பிரமன் வரம் கேட்ட போது, அப்பெருமான் இட்ட சாபத்தால், ஐந்தாவது தலை வெடித்து உதிர்ந்தது என்றும்; பழங்கதைகளில் காணப்பெறுகின்றது.


Thanks to: Thiruvasagam publication of Social Religious Guild, Thirunelveli


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments