உ
திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள புராண நிகழ்வுகள்
4. அந்தகனை மாயா வடுச் செய்தது
திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள 12. திருச்சாழல் - அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை - வயனங்கண் மாயா வடுச் செய்தான் காணேடீ
அந்தகன் என்னும் அசுரன் ஒருவன் சிவபெருமானை எதிர்த்து அவரது சூலப்படையினால் அழிவுற்றான் என்னும் பழஞ்செய்தி .
"காளமேகந்நிறக் காலனோடு அந்தகன் கருடனும்
நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்ச்ர நண்ணுவார்
கோளு நாளுந் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே"
(தேவாரம் 2763)
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமிழலையார்..."
(தேவாரம் 2891)
..... தண்வயல் கண்டியூர் உறை வீரட்டன்
அமரரானவர் ஏத்த அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே"
(தேவாரம் 3209)
எனத் திருமுறைகளில் காணப்படுகின்றது. 'அந்தகன்' என்பதற்கு 'யமன் ' என்றும், 'சனி' என்றும் பொருள் கூறுவாரும் உண்டு.
0 Comments