Subscribe Us

header ads

சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ் 2025 - ஸ்ரீ குறுங்காலீஸ்வரர்

திருச்சிற்றம்பலம் 

அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ குறுங்காலீஸ்வர சுவாமி திருக்கோயில். 

கோயம்பேடு, சென்னை - 600 107 

சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ் 2025 

திவ்யமங்கள மூர்த்தியாய், தயாபரனாய் ஆதிமத்யாந்த ரஹிதனாய் இமயநியமாதி அஷ்டாங்கயோகங்களாலும், ஸமதமாதி குணங்களாலும் தபோயோக, ஞானயோக, கர்மயோக சாதனங்களாலும் அறிவதற்கரிய தத்வப்பொருளாய் அகண்ட பரிபூரணமாய் விளங்கும் இறைவன் சிவபெருமான் உலகின் கண்ணுள்ள ஜீவராசிகள் அனைத்தும் பிறவிப்பிணியினின்றும் நீங்கி பேரின்பத்தில் உய்யும் பொருட்டு திருவுளங்கொண்டு பல வடிவங்கள் தாங்கி எழுந்தருளிய பல திவ்யஷேத்ரங்களுடைய தொண்டை நாட்டில் கோயம்பேடு என்னும் சிவஷேத்ரத்தில் இராமனின் புத்திரர்களான குசலவர்கள் பிறந்த தலமும், தங்களின் தந்தையென்றறியாது, அஸ்வமேதயாக குதிரைக்காக போரிட்டதால் ஏற்பட்ட பித்ரு தோஷம் நீங்க பூஜித்ததும், வடக்கு நோக்கிய ஸ்வயம்பு மூர்த்தியும், ஷேத்திரமூர்த்தியான சோமஸ்கந்த மூர்த்தி மூலவரைபோன்று விமானம் த்வாரபாலகர்கள் கூடிய தனிசந்நதியிலிருந்து பக்தர்களுக்கு அனுகிரஹிப்பதும் வால்மீகிமகரிஷி ஆச்ரமம் அமைத்து தவம்புரிந்த இடமும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடப்பெற்றதும் சரபேஸ்வரர் வழிபாடு பெருமையுடையதுமான இத்தலத்தில் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ குறுங்காலீஸ்வர சுவாமிக்கு, ஸ்வஸ்தி ஸ்ரீநிகழும் மங்களகரமான விச்வாவஸூ வருஷம் சித்திரை மாதம் 19ஆம் நாள் (02-05-2025) வெள்ளிக்கிழமை முதல் துவங்கி விச்வாவஸு வருஷம் சித்திரை மாதம் 30ஆம் நாள் (13-05-2025) செவ்வாய்க்கிழமை முடிய நடைபெறும் சித்திரைப்பெருவிழாவில் ஆன்மீக பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறைவனை தரிசித்து வணங்கி, இஷ்ட காம்யார்த்த ஸித்தியையடைவீர்களென்று கேட்டுக்கொள்கிறோம்.  


















Post a Comment

0 Comments