திருச்சிற்றம்பலம்
அன்புடையீர்!
தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 சிவாலயங்களில் ஒன்றானதும், வியாழ குரு வழிபட்டு பாப நிவர்த்தி பெற்றதன் காரணமாக குரு ஸ்தலம் என பெயர் பெற்றது. திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் முதலான அருளாளர்களால் பாடப்பெற்றதும், சூரியன் சந்திரன் - இந்திரன் - ஸ்ரீ மகா விஷ்ணு - ஸ்ரீ ராமர் - ஸ்ரீ ஆஞ்சநேயர் -ஸ்ரீ பரத்வாஜ மாமுனிவர் ஆகியோரால் பூஜிக்கப்பட்டதுமான பாடி என்று வழங்கும் திருவலிதாய புண்ணிய க்ஷேத்திரத்தில் அருள்மிகு ஜெகதாம்பிகை ஸமேதராய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு திருவல்லீஸ்வரர் சுவாமிக்கு ஆண்டுதோறும் நடந்தேறி வருவது போல இவ்வாண்டு,ஸ்ரீ விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 20ம் தேதி (03-05-2025) சனிக்கிழமை முதல் ஸ்ரீ விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 29ம் தேதி (12-05-2025) திங்கட்கிழமை வரை 10 நாட்கள் நடைபெறவிருக்கும் பெளர்ணமி திருவிழா (பிரம்மோற்சவ விழா) விற்கு பக்தர்கள் அனைவரும் வருகை தந்து அருள்மிகு திருவல்லீஸ்வர சுவாமியின் திருவருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
















0 Comments