Subscribe Us

header ads

காஞ்சி மகாலிங்கேஸ்வரர் கோயில்

 சிவ சிவ.

திருச்சிற்றம்பலம்.

பெரிய காஞ்சீபுரத்தில் அப்பா ராவ் தெருவில் மகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில், காஞ்சி புராணத்துல சொல்லப்பட்டுள்ள நூற்றி எட்டு சிவன் கோயில்களில் ஒன்று. இவ்வுலகில் யார் பெரியவன் என்று பிரம்மனும், விஷ்னுவும் பலகாலம் போர் புரிந்தனர். அந்த போரிடையே சிவபெருமான் ஜோதிலிங்க வடிவமாய்த் தோன்றினார். ஆதியும் அந்தமுமில்லா சிவபெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் இருவரும் மயங்கினர்.  நீங்கள் இருவரும் காஞ்சியில் இதுபோல் ஓர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜித்துப் படைத்தல் காத்தலுக்குரிய உரிமையைப் பெறுவீர்களாக. மானிடர், தேவர் என யாவரும் சிவலிங்க பூஜையை மேற்கொள்வீர்களாக அவ்வாறு பூஜை புரிவார்க்கு மயக்கம், வறுமை, பயம், மனக்கவலை, பசி, நோய் முதலியன நீங்கும் மற்றும் தோன்றி வருத்தும் பிறவி ஒழியும் என்று சிவபெருமான் அருளி மறைந்தார். 

திருச்சிற்றம்பலம்.










Post a Comment

0 Comments