Subscribe Us

header ads

சிவன் கூடல் - பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்

 அருள்மிகு பிரம்மபுரீசுவரர் தல வரலாறு

2000-ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆரியம்பாக்கம், பிரம்மபுரீசுவர் ஆலயம் முழுவதும் சிதைந்துவிட்டது. மூலவரும் சிவலிங்கமும், நந்தியும் மட்டுமே பாதுகாக்கப்பட்டிருந்தது. குடியாத்தம் தமிழ்வேதம் ஆசிரியர் சிவ.ஆ.பக்தவச்சலம் அவர்கள் இச்சிவாலயத்தைப் புதியதாக அமைக்கும் பணியை 02.08.2015 அன்று ரூ.25000) கொடுத்து தொடங்கினார்கள். நிதிப்பற்றாக்குறை ஏற்படும் பொழுதும், மகா மண்டபம் கட்டும் பொழுதும் சுமார் ரூபாய் 6,00,000 (ஆறு லட்சம்) கொடுத்து உதவினார். ஊர் மக்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடனும் இச்சிவாலயம் முழுமையாக "மூடிக்கப்பட்டது 17.06.2018 அன்று நீந்தமிழ் முறையில் குடமுழுக்குவிழாவும் .குடியாத்தம் ஐயா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இச்சிவாலயத்தின் அன்றாட பூசை நடைபெறுவதற்காக சிவ.ஆ.பக்தவச்சலம் அவர்கள் ரூபாய் ஒரு லட்சமும், ஆரணி சிவ.நாராயண் ஆச்சாரி அவர்கள் ரூபாய் 50,000 (ஐம்பதாயிரம்) ழூம் மதுரமங்கலம் கனராவங்கியில் நிரந்த வைப்பு நிதியாக வைத்துள்ளார்கள்.

ஆரியன் என்னும் சொல் பிரம்மாவை குறிக்கும், பிரம்மன் தவம் செய்து சரசுவதியை மனம் புரிந்த தலம் ஆரியன்பாக்கம் எனப்படுகிறது, தற்காலத்தில் ஆரியம்பாக்கம் என மருவி அழைக்கப்படுகிறது, இத்தலம் பல யுகங்களைக் கடந்து என்பது தொல்லியலார் கருத்தாகும்.

பிரம்மன் வழிபட்டதால் இறைவர் பிரம்மபுரீசுவரர் எனப்படுகிறார். பிரம்மன் இத்தலத்து இறைவரை வணங்கி அவர் அருளால் சரசுவதியை திருமணம் செய்து கொண்டார். ஆதலால் இத்தலத்து இறைவருக்கு கல்யாண சுந்தரேசுவரர் என்ற பெயரும் உண்டு பிரம்மனுக்குத் திருமணம் நடைபெற அருளியதால் இத்தலத்து இறைவரை அபிசேகம் செய்து வழிப்பட்டால் ஆண் பெண் இருபாலருக்கும் திருணம் நடைபெறும் என்பது ஆலய வரலாறு கூறும் உண்மையாகும்.






Post a Comment

0 Comments