Subscribe Us

header ads

திருமந்திரம் - அன்புடைமை - 4/10

21. அன்புடைமை 

ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை 

ஈரம் உடையவர் காண்பார் இணை அடி 

பாரம் உடையவர் காண்பார் பவம் தன்னைக் 

கோர நெறி கொடு கொங்கு புக்காரே.

சிவத்தின் மீது உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் சிவபெருமானது திருவுருவத்தை காண்பர்கள்;  மேலும் உள்ளத்தில் அன்பு, கருணை நிறைந்தவர்கள் இறைவனின் இணையடியினைக் காண்பர்கள்; ஆனால் மனத்திலே எல்லாவிதமான குடும்ப பாரங்களை கொண்டவர்கள், பாவத்தையே சம்பாதிப்பார்கள்; இவர்கள் கொடுமையான செயல்களைச் செய்து நரகமே புகுவார்கள்.


Post a Comment

0 Comments