Subscribe Us

header ads

திருமந்திரம் - அன்புடைமை - 3/10

21. அன்புடைமை

என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப் 

பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும் 

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி 

என்பொன் மணியை எய்த ஒண்ணாதே.


உடம்பில் உள்ள  எலும்பை விறகாக்கி, சதையை இறைச்சியாக அறுத்து, பின்னர் அவற்றை நெருப்பிலே இட்டுப் பொன் போல் வறுத்தாலும் சிவனை அடையமுடியது. யார் ஒருவர் அன்போடு மனம் உருகி சிவபெருமானை வணங்குகிறார்களோ அவர்களுக்கு  தான் என் பொன் மணியான சிவபெருமானை அடைய முடியும். வேறு எந்த வழிகளாலும் அவனை உணரவே முடியாது.

Post a Comment

0 Comments