Subscribe Us

header ads

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ்

நலந்திகழ் திருவள்ளுவர் ஆண்டு- 2055, பசலி ஆண்டு 1433, சோபகிருது, குரோதி வருடத்தில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் சித்திரைப் பெருவிழா, பங்குனி திங்கள் 29-ஆம் நாள் முதல் சித்திரைத் திங்கள் 10-ஆம் நாள் முடிய (11.04.2024 முதல் 23.04.2024 முடிய) சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இச்சித்திரைப் பெருவிழாவின் முக்கியத் திருநாட்களாக, பங்குனி திங்கள் 30-ஆம் நாள் (12.04.2024) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள், மிதுன லக்கனத்தில் கொடியேற்றமும், சித்திரைத் திங்கள் 6-ஆம் நாள் (19.04.2024) வெள்ளிக்கிழமை இரவு 07.35 மணிக்கு மேல் 07.59 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குப் பட்டாபிஷேகமும், சித்திரைத் திங்கள் 07-ஆம் நாள் (20.04.2024) சனிக்கிழமை அருள்மிகு மீனாட்சி அம்மன் திக்கு விஜயமும், சித்திரைத் திங்கள் 08-ஆம் நாள் (21.04.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், சித்திரைத் திங்கள் 09-ஆம் நாள் (22.04.2024) திங்கட்கிழமை காலை 05.15 மணிக்கு மேல் 05.40 மணிக்குள் மேஷ லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தேருக்கு எழுந்தருளலும், காலை 06.30 மணி தொடங்கி திருத்தேரோட்டமும், சித்திரைத் திங்கள் 10-ஆம் நாள் (23.04.2024) செவ்வாய்கிழமை தீர்த்தம் மற்றும் தெய்வேந்திர பூஜையும் வெகுசிறப்பாக நடைபெற உள்ளன.






















Post a Comment

0 Comments