தென்காசியில் 11 அடி சிவலிங்கம்.
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம், ஈச்சந்தா கிராமத்தில் வெட்ட வெளியில் இருந்த 11 அடி உயரத்தில் சித்தர்கள் வழிபட்ட சிவலிங்கம் மற்றும் நந்தியம் பெருமான் திருமேனிகள் இருந்தது.
இந்நிலையில் 16.03.2024 - சனிக்கிழமை அன்று கோவை அரன் பணி அறக்கட்டளையினர் ஊர்ப் பொது மக்களுடன் இணைந்து பீடங்களில் திருமேனிகளை பிரதிட்டை செய்தனர்.
திருமுறைகளில் கயிறு சாற்றி சிவகாமி சுந்தரியம்மை உடனுறை ஆனந்த நடராச பெருமான் எனும் திருநாமம் இட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பெற்றது.
உடனுக்குடன் 20X11 என்ற அளவில் மேற்கூரை அமைத்து தரப்பெற்றது.
0 Comments