Subscribe Us

header ads

எண்மருந்து சாற்றி நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ் - அருள்மிகு அஞ்சனாட்சி அம்பாள் உடனுறை கச்சபேஸ்வரர் ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில்

 திருச்சிற்றம்பலம்

அழகு மிளிர ஆலயம் புதுப்பித்து எண்மருந்து சாற்றி நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ்

செங்கல்பட்டு வட்டம், 51-திருக்கச்சூர் கிராமம், அருள்மிகு அஞ்சனாட்சி அம்பாள் உடனுறை கச்சபேஸ்வரர் ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில்

பேரன்புடையீர்! ஆன்மீகப் பெருந்தகையீர்!!

நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 08-ஆம் தேதி (21-04-2024) ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி, உத்திர நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்குமேல் 11.15 மணிக்குள்ளாக மிதுன லக்கினத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தகோடிகளும், பொதுமக்களும் இக்குடமுழுக்குப் பெருவிழாவில் திரளாகக் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் பேரருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.






ஸ்தல வரலாறு

பேரன்புடையீர்! ஆன்மீகப் பெருந்தகையீர் !!

தொண்டை நன்னாட்டில் தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற சிவத்தலங்கள் 32 ஆகும். இதீல் மணிமுடியெனத் திகழ்வது திருக்கச்சூர் ஆலக்கோயில், சுந்தரர் இத்தலத்தை ‘வயல் சூழ்ந்த ஆலைக்ழனிய பழனக்கச்சூர் "என்றும், "அன்னம் மண்ணும் வயல்சூழ் கச்சூர்" என்றும் இவ்வூரின் இயற்கை வளத்தை பற்றி கூறுகிறார்.

இத்திருத்தலம் சமயக்குறவர் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்று சிவத்தலமாகும். இத்திருத்தல இறைவனைப் பற்றி சுந்தரர் பத்து பாடல்கள் பாடியுள்ளார். சிவபெருமானை தரிசிக்க சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கச்சூளுக்கு வந்தபோது நன்பகலாகி விட்டது. பச் அவரை வாட்டியது. அப்போது தன்னைக் காண வந்த தம்பிரான் தோழரின் பசியைப் போக்க எம்பிரான் அந்தணர் வேடம் கொண்டு இக்கிராம மக்களிடம் யாசகம் பெற்று அந்த உணவை சுந்தரருக்கு அளித்து அவர் பசியை போக்கினார். எனவே இத்திருத்தலம் இறைவனே தொண்டருக்குத் தொண்டு செய்த திருத்தலமாகியது.

இதனால் இங்குள்ள ஈசனுக்கு விருந்திட்ட ஈசன் இரந்திட்ட ஈசன் என்ற பெயருண்டு. (இறைவன் இறந்து உணவு அளித்த நிகழ்ச்சியைக் "கதுவாய் தலையில் பலி நீ கொள்ள” என்று சுந்தரர் இத்திருத்தலப் பதிகத்தில் கூறியுள்ளார்) இத்திருக்கோயில் பிரகாரத்தில் விருந்திட்ட ஈசன் தனியே சன்னதி கொண்டுள்ளார்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மகாவிஷ்ணு பர்வதமலை கடலில் மூழ்கிய போகாமல் காப்பதற்கு ஆமை வடிவம் கொண்டு தன் முதுகில் தாங்கியதாக தலபுராணம் சொல்கிறது. அவ்வாறு மலையை தாங்குவதற்குரிய ஆற்றல் பெறவேண்டி இத்தலத்து இறைவனைக் கச்சம் (ஆமை) உருவங்கொண்டு பூசித்து வலிமை பெற்றார். இதனால் இவ்வூர்ப் பெயர் கச்சப + ஊர் = "கச்சூர்" எனப் பெயர் பெற்று "திரு" என்ற அடைமொழியோடு 'திருக்கச்சூர்" என்றும், இங்குள்ள ஈசனுக்கு "கச்சபேஸ்வரர்" என்ற திருநாமமும் வந்ததாக கூறப்படுகிறது.

திருக்கச்சூர் என்பது ஊரின் பெயர், இவ்வூர் இறைவன் உறையும் இடம் ஆலக்கோயில் ஊரையும். கோயிலையும் ஒன்றிணைத்து திருக்கச்சூர் ஆலக்கோயில் என்று தேவாரத் திருப்பதிகத்தில் கூறப்படுகிறது. இத்திருக்கோயிலின் தலமரம் "கல்லால மரம்" தீர்த்தம் கூர்ம (ஆமை) தீர்த்தம். திருமால் அவர்ம அவதாரத்தில் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது உண்டாக்கிய தீர்த்தமாதலால் கூர்ம தீர்த்தம் எனப் பெயர் பெற்றது சிவகங்கை என்ற பெயருடைய தீர்த்தமும் உள்ளது.

இங்குள்ள மூலவர் கருவறை விமானம் கஜபிருஷ்ட விமானமாக சுட்டப்பட்டுள்ளது. இது கட்டடக் கலையின் சிறந்த அம்சமாகும். யானையின் பின்புறப்பகுதி அரைவட்டமாக உள்ளது போல் இவ்வமைப்பு காணப்படும் இவ்வாலயத்தின் நவகிரகங்கள் இல்லை. இத்திருக்கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் உள்ள ஸ்ரீசக்கரம் மிகவும் விசேஷமானதாகும். இந்த ஸ்ரீசக்கரத்திற்கு மாதந்தோறும் பெளர்ணமி, அமாவாசை மற்றும் ஜென்ம் நட்சத்திர தினத்தில் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகத்தால் கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றது.

திருமுறைத் தலங்கள் 275-ல் 27 திருத்தலங்கள் விடங்கத் தலங்கள் என்று அழைக்கிறார்கள். விடங்கள் என்றால் "உளியால் செதுக்கப்படாத ஒன்று என்று பொருள். "பங்கம்" -(வடமொழிச் சொல்) உளியால் செதுக்கப்பட்டது என்று பொருள். வி+டங்கம் = விடங்கம் என்றால் உளியால் செதுக்கப்படாதது என்று பொருள். திருக்கச்சூர் ஆலக்கோயில் விடங்கத் தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள சிவபெருமானின் லிங்க வடிவம் உளியால் செதுக்கப்படாமல் "தான்தோன்றி நாதனாக *(சுயம்புவாக) காட்சி தருகிறார். புற்றிடம் கொண்டவராக காட்சி அளிப்பதால் கருவறைக்குப் பக்கத்தில் தனிச் சன்னதி கொண்டு அம்மை அப்பனாக குமரனோடு ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தரும் சோமஸ்கந்தரை தியாகராஜர் என்று அழைக்கப்படுகின்றார். இத்தியாகராஜருக்கு தனி வழிபாடுகளும், திருவிழாக்களும், காலபூஜைகளும் நடைபெறுகிறது. உபய விடங்க கோயில்களில் ஒன்றான திருக்கச்சூர் ஆலக்கோயிலில் தியாகராஜர் தனிச் சன்னதியில் வீற்றிருப்பது சிறப்பாகும். இத்தியாகராஜருக்கு அமிர்ததியாகராஜர் என்ற பெயருமுண்டு.

இத்திருக்கோயிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். அதுசமயம் தியாகராஜருக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும். இத்திருவீத் உணவானது சூரியன் மறைவுக்கு பிறகு தொடங்கி சூர்யோதயத்திற்கு முன்பாகவே முடிக்கப்படும். அல்லாறு உலா வரும்போது 18 வகையான தெய்வீக நடனங்ளைப் புரிவது இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும் இவ்வதியாக உலா வருவதை தியாகர் பவனி என்றும் அழைக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments