நான்காம் திருமுறை
(திருநாவுக்கரசரின் நமச்சிவாயத் திருப்பதிகம்)
பொது 4.11.2
திருச்சிற்றம்பலம்
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
பசுக்களுக்கு ஆபரணமாக திகழ்வது சிவபெருமான் மகிழ்ந்து நீராடும் ஐந்து பொருட்களான பஞ்சகவ்வியம்.
அரசனுக்கு ஆபரணமாக திகழ்வது நடுநிலை நெறி தவறாமல் நடந்து கொள்ளும் தன்மை.
நமது நாக்குக்கு ஆபரணமாவது திகழ்வது “நமசிவாய” என்னும் நாமத்தை சொல்வதே!
திருச்சிற்றம்பலம்
0 Comments