திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் ,மாத்தூர் கிராமம், இப்போது பார்க்கின்ற சிவலிங்கமானது சுமார் 1500 வருடத்திற்கு முன்பு சித்தர்கள் ஞானிகள் மன்னர்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமாகும்.
காலப்போக்கில் இங்கிருந்த கோயில் மண்டபமானது பழுதடைந்து மண்ணில் புதைந்து விட்டது, இந்த சிவலிங்கமானது வெயிலிலும் மழையிலும் கேட்பாரற்று இருக்கின்றது, ஒரு சில அன்பு உள்ளங்களால் நல்ல மனிதர்களால் இந்த சிவலிங்கம் மீண்டும் பிரதிஷ்டை செய்து மேற்குறை அமைத்து கொண்டுவரும் நோக்கில் உள்ள போது, இக்கிராமத்தில் உள்ள நான் எனும் கர்வம் கொண்ட தீய எண்ணம் கொண்ட சில மனிதர்களால் தடுக்கப்படுகின்றது,
ஆகவே இந்த பதிவானது இறை சிந்தனையில் இருக்கும் நண்பர்களுக்கும் சிவனடியார்களுக்கும் பழமையான சிவாலயங்களை மீட்கும் நண்பர்களுக்கும் சென்றடைய வேண்டுகின்றேன், இறைவன் அருளால் இக்கோயிலின் திருப்பணிகள் மீண்டும் தொடங்க பிரார்த்திக்கிறேன், முகநூல் பதிவு
0 Comments