Subscribe Us

header ads

அருள்மிகு காந்திமதியம்மை உடனுறை அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில் திருச்சிராப்பள்ளி உரையூர் கும்பாபிஷேகம்

அன்புடையீர், 

கங்கையில் புனிதமாம் காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் சோழவள நாட்டின் தலைநகரமாம் உறையூரின் நடுவே பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. "திருமுக்கீச்சரம்" என்பதே திருக்கோயிலின் பெயர். 

உதங்க மாமுனிவருக்கு ஐந்து காலங்களில், ஐந்து நிறங்களுடன் பெருமான் காட்சி அருளியதால் உறையூரில் உள்ள இத்திருக்கோயில் பஞ்சர்ணேஸ்வரர் என்று போற்றப்படுகிறது. 

ஸ்ரீ பிரம்ம தேவர், கருடன், கார்கோடன் முதலியோர் பூசித்த தலமாகும். திருமுக்கீச்சரத்தடிகள் என்று ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, கருவறையில் உள்ள மூலவரின் திருமேனி சுயம்பு லிங்கமாகும். "பிற்சனனமில்லா சற்சனசேர் திருமுக்கீச்சரம் " என வள்ளல் பெருமானால் பாடப்பெற்ற திருத்தலமாகும். 

பிரம்மனுக்கு ஐந்நிறம் காட்டி அதன் மூலம் ஐவகை பூதங்களையும் ஆக்கி - அதனுள் ஒடுங்கி அப்பூதங்களின் நிறங்களையும் ஏறிட்டுக் கொண்டு உலகுக்கு அருள்பவன் தானே என்பதை உணர்த்தியவர். 

உதங்கமாமுனிவருக்கு ஐவகை நிற லிங்கமாக காட்சிக் கொடுத்து ஐம்பூதங்கள், ஐம்புலன்கள் யாவும் தானே என்பதை முனிவருக்கு உணர்த்தி அவருடைய மன கலக்கத்தைப் போக்கி மன அமைதியை அருளியவர். 

மேலும், இத்தலத்தில் தவமே புரிந்து ஐந்து வர்ணத்தில் உதங்கமா முனிவருக்கு இறைவன் ஐந்து வர்ணத்தில் காட்சி அளித்தார். சோழ அரசனின் மதங்கொண்ட பட்டத்து யானையை இறைவன் கோழி வடிவில் வந்து அடக்கியதால் இத்தலம் கோழியூர் எனப் பெயர் பெற்றது. 

நிகழும் மங்களகரமான ஸ்ரீ சோபகிருது வருடம் மாசி மாதம் 27 ஆம் நாள் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை முதல் யாக வேள்விகள் தொடங்கப்பெற்று

பங்குனி மாதம் 7 ஆம் நாள் (20.3.2024) புதன்கிழமை ஏகாதசி திதி, பூசம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 - 10.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி உறையூர், அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு பெருவிழா இறையருள் துணை கொண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.






Post a Comment

0 Comments