Subscribe Us

header ads

திருநெல்வாயில் அரத்துறை ஈசன் எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு முத்துச்சிவிகை, வெண்குடை, திருச்சின்னம் அளித்த நிகழ்வு.


திருநெல்வாயில்
 அரத்துறை ஈசன் எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு முத்துச்சிவிகை, வெண்குடை, திருச்சின்னம் அளித்த நிகழ்வு.

பிப்ரவரி_16ம்_தேதி நம் கண் முன்னே காட்சியாக நிகழ்ந்திட உள்ளது.

அனைவரும் வருக!

அரத்துறைநாதர் அருள் பெறுக!

#தங்கும்_இடம்: #திருவமுது ஏற்றிட:

காலை திருவமுது

1.இறையூர் சிவன் கோயில் திருமண மண்டபம்.

பகல் திருவமுது

2.திருவட்டதுறை விஸ்வநாதன் திருமண மண்டபம்.

தொடர்புக்குஅடியேன் அரவிந்த்: 9715693228 பெண்ணாகடம்.


பெரியபுராணம்_பாடல்_எண்: 187

ஆதியார் தம் அரத்துறை நோக்கியே

காதலால் அணைவார் கடிது ஏகிட

தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்

பாத தாமரை நொந்தன பைப்பய.

#பெரியபுராணம்_பாடல்_எண்: 197

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்

மான முத்தின் சிவிகை மணிக் குடை

ஆன சின்ன நம் பால் கொண்டு அருங்கலைக்

கோன் அவன் பால் அணைந்து கொடும் என.


2ம்_திருமுறை

திருஞானசம்பந்தர்_பதிகம்:

எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்

சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்

கந்தமாமலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரைமேல்

அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.


திருச்சிற்றம்பலம்




 

 


Post a Comment

0 Comments