Subscribe Us

header ads

71வது உழவாரப் பணி - அழிஞ்சிவாக்கம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 07.06.2026

அழிஞ்சிவாக்கம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 71வது உழவாரப் பணி பயணம்

சிவபெருமானது திருப்பெயரைச் சொல்லும் பொழுதே மனம் பரவசமடைகிறது. அவருக்கு உழவாரப்பணி செய்வதோ ஒரு பரமஆனந்தம். கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.06.2026) அன்று, சுமார் 40 சிவன் அடியார்கள் இறைவனின் அருளால், திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஷ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு உழவாரப்பணி செய்யும் பேறு பெற்றோம்.

காலை 8.00 மணிக்கு மணி அளவில் அனைத்து சிவனடியார்களும் கோயம்பேடு எமது இல்லத்தில் இருந்து புறப்பட்டோம். கோவிலியை அடைந்து, மூலவர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் அம்பிகை அகிலாண்டேஷ்வரியை வணங்கி, பணியைத் தொடங்கினோம். 

முதலில் கோவிலைச் சுற்றியுள்ள தேவையற்ற செடி, கொடிகள், முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினோம். பக்தர்கள் வரும் பாதைகள் தூய்மையாக்கப்பட்டன.

அதன்பின் கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் தெளித்துத் துடைத்தோம். விளக்குமாறு பயன்படுத்தி, குப்பைகளை எடுத்து சீர்படுத்தினோம்.

பழைய பூஜைப் பொருட்கள், சாமியின் வஸ்தியம் ஆகியவைகளை தூய்மை செய்தோம்.

இந்தப் பணியின் போது எங்கள் உடல் வியர்த்தாலும், மனம் குளிர்ச்சி அடைந்தது. “என் கடன் பணி செய்வதே” என்பதை உணர்ந்தோம்.

கோவிலைச் சுத்தம் செய்து முடித்தவுடன், கோவில் சந்நிதியில் எழுந்தருளியுள்ள 63 நாயன்மார்களுக்கும், மூலவர் ஜலகண்டேஸ்வரருக்கும் சிறப்பான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. பால், தயிர், தேன், பன்னீர் கொண்டு நடத்தப்பட்ட அபிஷேகத்தின் புனித நீர் (விபூதி, குங்குமம்) எங்கள் மீது அருளப்பட்டது. அதன்பின் உணவுப் பிரசாதத்தை உண்டோம்; அது அமிர்தமாக இருந்தது.

மாலை 7.00 மணியளவில் இத்திருப்பணி இனிதே நிறைவுற்றது. கோவில் நிர்வாகிகள் எங்கள் சிறுசேவையைப் பாராட்டி, மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர்.

இந்த உழவாரப்பணி வெறும் கோவில் சுத்தம் இல்லை; அது நம் உள்ளத்தில் படிந்திருக்கும் காமம், குரோதம், பொறாமை போன்ற மாசுகளை வெளியேற்றும் ஒரு ஆன்மீகப் பயணமாகும். ஜலகண்டேஸ்வரரின் திருவருளில் பங்கு பெற்ற இந்த நாள் நம் வாழ்வில் மறக்க முடியாத நாள். 

அனைத்து சிவ அடியார்களுக்கும் இத்தகைய அனுபவம் கிட்ட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

திருச்சிற்றம்பலம்

அடியார்க்கும் அடியேன் சிவ சேகர், கோயம்பேடு.

செல் - 73580 56648. 


கோவில் தொடர்புக்கு

காசி ஐயா  73054 59502










































Post a Comment

0 Comments